“கும்கி 2” – கதாநாயகனை முட்டித் தள்ளிய யானை – நடந்தது என்ன?

“கும்கி 2” – கதாநாயகனை முட்டித் தள்ளிய யானை – நடந்தது என்ன?
  • PublishedNovember 11, 2025
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கும்கி படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது. படம் வரும் 14ஆம் திகதி ரிலிஸூக்கு தயாராகம் உள்ளது.
இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் கதாநாயகன் மதி யானையின் தும்பிக்கையை தனது தோல் மீது வைத்து நடிக்கும் போது யானை நடிகர் மதியை தனது தும்பிக்கையால் முட்டித் தள்ளுகிறது.
உடனே அவர் பின்னால் சென்று விழுகின்றார். நல்லவேளை கதாநாயகனுக்கு அடி எதுவும் படவில்லை. தும்பிக்கையால் தள்ளிவிட்டதை போல தந்தத்தால் தள்ளிவிட்டு இருந்தால் நடிகருக்கு மிகப்பெரிய காயம் ஏற்பட்டிருக்கும்.

இந்த காட்சியைப் பார்க்கும் போது அறிமுக நாயகனான இருந்தாலும், டூப் போடாமல் தைரியமாக நடித்துள்ளார்.

இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்துள்ள கதாநாயகன் குறித்து படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் குறிப்பிடுகையில்,

“ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி பேசுகிறது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் மதி , தனது அர்ப்பணிப்பு, பொறுமை, கடின உழைப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரத்துக்கு தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியாக காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாயினும், தொடர்ந்து பயிற்சி செய்து யானையுடன் உள்ள தொடர்பை உயிர்ப்பித்துள்ளார். மதி யின் நடிப்பைப் பார்த்து, அவரது ஆர்வமும் முயற்சியும் தெளிவாகத் தெரிகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *