நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை வெளியிட்ட மகேஷ் பாபு

நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை வெளியிட்ட மகேஷ் பாபு
  • PublishedNovember 23, 2025

நாக சைதன்யா – மீனாட்சி சவுத்ரி இணையும், கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் உருவாகி வரும் புராண திரில்லர் படத்திற்கு தற்காலிகமாக ‘விருஷகர்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நாக சைதன்யாவின் 39ஆவது பிறந்தாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. இதனை மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் லாபட்டா லேடீஸ் நடிகர் ஸ்பர்ஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் கீழ் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் பி. லோக்நாத் இசையமைக்கிறார்.

தற்போதைய காலக்கட்டத்தில் புராண இதிகாசங்களை தழுவிய படங்கள் வெற்றி பெற்று வரும் நிலையில், நாக சைதன்யாவை புதிய தோற்றத்தில் காண மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *