ப்ரீ பிசினஸில் லியோவை ஓரம்கட்டிய சூர்யா : படம் வெளியீட்டுற்கு முன்னமே இவ்வளவு வசூலா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 10 மொழிகளில் உருவாகுவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சூர்யா 42 படத்தை பற்றி இணையத்தில் பல செய்திகள் உலாவி வருகிறது.
அதாவது லியோ படத்தை விட ப்ரீ பிசினஸில் சூர்யா 42 படம் முந்தியதாக ஒரு செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு ப்ரீ பிசினஸில் லியோ படம் பட்டையை கிளப்பி வருகிறது. ரிலீசுக்கு முன்பே 400 கோடியை தாண்டி இப்படம் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் அவரது 42 வது படம் லியோவை தாண்டி 500 கோடி வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆனாலும் இந்த தகவலை சூர்யா பட இயக்குனர் நிராகரித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.