கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பாரா அஸ்வத் மாரிமுத்து???

கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பாரா அஸ்வத் மாரிமுத்து???
  • PublishedApril 30, 2025

ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றவர் அஸ்வத் மாரிமுத்து. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் சமீபத்தில் டிராகன் திரைப்படம் வெளிவந்தது.

இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள திரைப்படம் எஸ்.டி.ஆர் 51 ‘God of love’. டிராகன் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்கள்.

இந்நிலையில், அஸ்வத் மாரிமுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை அணுகி கதை சொல்லி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், தற்போது எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இனிவரும் நாட்களில் தான் கமல்ஹாசனுடன் அஸ்வத் மாரிமுத்து கூட்டணி அமைப்பாரா? என்பது குறித்து தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *