அடுத்தடுத்து குவியும் படவாய்ப்புகள் : பிஸி ஷெடூலில் சுற்றும் வாரிசு நடிகை!
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி டாக்டர் படிப்பு படித்திருந்த போதிலும் நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக நடிகையாக மாறி இருக்கிறார்.
கார்த்திக்கு ஜோடியாக விருமன் திரைப்படத்தில் அறிமுகமான அவர் இப்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து இவர் சத்தம் இல்லாமல் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
அதிலும் இப்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் இப்போது விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
அந்த வகையில் பத்து வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருந்தாலும் இவர் இன்னும் வளர்ந்து வரும் ஒரு நடிகராகவே இருக்கிறார். அதனாலேயே இப்போது அவர் தனக்கு மிகப்பெரும் வெற்றியை தேடி கொடுத்த ராட்சசன் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்து இருக்கிறார்.
அந்த படத்தில் தான் அதிதி சங்கர் ஹீரோயினாக கமிட் ஆகி இருக்கிறார். டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அதிதி எப்படி விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்தார் என்ற கேள்வி பலருக்கும் தோன்றியுள்ளது. நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் நடிக்கும் படத்தில் தான் அதிதி ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.