இந்த ஒரு பழக்கத்தால் கெரியரை இழந்த முன்னணி நடிகைகள்!
நடிகைகளில் சிலர் சினிமாவுக்குள் வந்தவுடன் பப், பார்ட்டி என தங்களுடைய கலாச்சாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்கின்றனர்.
இதை அவர்கள் சந்தோஷத்திற்காக செய்யும் வரை எந்த பிரச்சனையுமே இல்லை. ஆனால் தொடர்ந்து இது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் சினிமா வாய்ப்புகளையே இழந்து விடுகிறார்கள்
அப்படி வாய்ப்புகளை இழந்து காணாமல்போன சில நடிகைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
நித்யா மேனன்: தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் 60களில் இருந்த நடிகைகளை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தியவர் தான் நித்யா மேனன்.நித்யா மேனன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அவருடைய நடிப்பை நாங்கள் ரசிப்போம் என்று ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் மதுபழக்கத்திற்கு அடிமையாகியதால் தான் உடல் எடை கூடியதாக சொல்லப்படுகிறது.
நமிதா: நடிகை நமிதா கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் வந்து, சரியான புரிதல் இல்லாமல் கவர்ச்சி நடிகையாக மாறியவர். ஆனால் மது பழக்கத்தால் உடல் எடை கூடிப்போன நமிதா சினிமா வாய்ப்பில்லாமல்இ திருமணம் செய்து கொண்டு தற்போது அழகான இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.
கிரண்: நடிகர் அஜித்குமார் உடன் ஜோடி போட்ட நடிகை கிரண் மதுப்பழக்கத்தால் அதிக உடல் எடை கூறி சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார்.
காயத்ரி ரகுராம்: நடிகை காயத்ரி ரகுராம் நடன கலைஞராகவும் இருப்பவர். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மது பழக்கத்தால் உடல் எடை கூடிய பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் திருமணம் செய்து கொண்டார்.
பூனம் பாஜ்வா: நடிகைகள் குஷ்பூ மற்றும் ஹன்சிகா மோத்வானி வரிசையில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றார் பூனம் பாஜ்வா. ஆனால் மதுப்பழக்கத்தால் ஓவர் வெயிட் போட்டு எல்லா வாய்ப்புகளையும் தவற விட்டு விட்டார். இப்போது சிறப்பு தோற்றத்திலும்இ ஒரு பாடல் காட்சிகளுக்கு மட்டும் ஆடி வருகிறார் இவர்.