பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் பிரபலம்!

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் பிரபலம்!
  • PublishedJune 25, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் குடும்பங்கள் கொண்டாடும் இல்லத்தரசிகளின் நாடகமாக இருக்கிறது.

இதில் கோபி என்ற கதாபாத்திரத்திற்கு வலு சேர்ப்பது, மற்ற நடிகர், நடிகைகளுடைய கதாபாத்திரங்கள்  தான். தற்போது இந்த சீரியலில் இருந்து முக்கிய நடிகை ஒருவர் வெளியேற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த சீரியலில்,  பாக்கியாவிற்கு துணையாக இரு மருமகள்கள் இருக்கிறார்கள்.  முக்கியமாக இந்த நாடகத்தின் மருமகள்களாக இருக்கும் ஜெனி மற்றும் அமிர்தா இவர்களுடைய நடிப்பை பார்ப்பதற்கு எதார்த்தமாகவும்,  இந்த மாதிரி மருமகள்கள் அமைந்தால் குடும்பமே சொர்க்கமாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கும்.

bhakiya-28

அதிலும் செழியன் பாக்யாவிடம் ரொம்பவே ஒட்டாமல் இருந்த நிலைமையில் கூட அத்தை பக்கம் தான் எப்பொழுதுமே நான் நிற்பேன் என்று இருந்தவர் தான் ஜெனி. இவர்தான் கதையில் இருந்து விலகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதில் என்னதான் இவருடைய கேரக்டர் வரவேற்கப்பட்டாலும் முன்னணி கதாபாத்திரம் இல்லாததால் இவரை தேடி ஹீரோயினாக வந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக ஜீ தமிழிலுக்கு தாவ இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *