A.R.ரஹ்மானுக்கு டஃப் கொடுக்கும் அனிருத் : வியந்து பார்க்கும் திரையுலகம்!

A.R.ரஹ்மானுக்கு டஃப் கொடுக்கும் அனிருத் : வியந்து பார்க்கும் திரையுலகம்!
  • PublishedJune 26, 2023

ஒரு படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் பங்களிப்பு வழங்குவது பாடல்கள் தான். அந்தவகையில்,  படங்களின் சிச்சுவேஷனுக்கு ஏற்ப பாடல்களை அமைப்பதன்பொருட்டே படங்கள் ஹிட் பெறுகின்றன.

அந்தவகையில் தற்போது ஏராளமான இசையமைப்பாளர்கள் இருந்தாலும், அனைவரினதும் பேவரிட் என்றால் அது அனிருத்தான்.

பன்முகத் திறமை கொண்ட இவர் 3 படத்தின் பாடல்கள் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் மேற்கொண்ட எண்ணற்ற பாடல்கள் ஹிட் கொடுத்துள்ளது.

அதிலும் குறிப்பாக மாஸ்டர்,  டாக்டர்,  டான்,  பீஸ்ட்,  விக்ரம் போன்ற பிரபலங்களின் படங்களில் இசையமைத்து மாஸ் காட்டி வருகிறார்.

மேலும் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு பெற்று வரும் இவர் சுமார் 4 முதல் 10 கோடி வரை சம்பளத்தை பெற்று அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வரும் நிலையில் சொற்ப காலத்திலேயே அனிருத் அவருடைய இடத்தை பிடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *