விஜயுடன் இணைந்தே தீருவேன் – வெற்றிமாறன் உறுதி!
லியோ படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபுவுடன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கு பிறகு முன்னணி இயக்குனர் ஒருவருடன் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் ரகடான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் விஜயுடன், இணைந்தே தீருவேன் என சொல்லியிருப்பது வைரலாகி வருகிறது.
எதார்த்தமான படைப்புகளுக்கு பெயர் போன இவர் சமீபத்தில் விடுதலை படத்தை இயக்கியிருந்தார். அதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வரும் சூழலில் வாடிவாசல் படத்திற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே வடசென்னை 2 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதை அடுத்து விஜய் படத்தில் நிச்சயம் இணைவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்காக லோகேஷை ஓவர் டேக் செய்யும் வகையில் ஒரு ஸ்கிரிப்ட்டையும் வெற்றிமாறன் யோசித்து வைத்திருக்கிறாராம்.
ஆனால் கையிருப்பில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு விஜய்க்காகவே நேரம் ஒதுக்கி ஸ்கிரிப்ட்டை பக்காவாக தயார் செய்யவும் முடிவு செய்திருக்கிறார் இந்த ரகடான இயக்குனர்.
ஏற்கனவே விஜய் இவருக்கு ஓகே சொல்லி இருக்கும் நிலையில் வெற்றிமாறனும் அதை உறுதிப்படுத்தி இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.