ஏழுவருட திருமண வாழ்க்கையை முடிவுக்கொண்டுவரும் தல,தளபதி நடிகை!
நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற அசின், விஜய், அஜித், கமல், விக்ரம் என அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
பெரிய அளவில் வெற்றி படங்களை கொடுக்காத இவர் ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவர் மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ஆவார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு குட்பை சொன்ன இவர் தன் கணவரின் பிசினஸில் உதவி செய்து வந்தார்.இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
இந்த சூழலில் இவர் தன்னுடைய ஏழு வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்ளப் போகிறார் என வெளிவந்திருக்கும் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தனக்கு ஏற்ற சரியான ஜோடியை இவர் திருமணம் செய்து கொண்டதால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார் என்று பலரும் நினைத்து வந்தனர்.
ஆனால் இப்போது இப்படி ஒரு செய்தி வெளிவந்திருக்கும் நிலையில் இதற்கான காரணம் என்ன என்ற கேள்வியையும் முன்வைக்கிறது. அதன்படி ராகுல் ஷர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது அசினுக்கு தெரிய வந்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது.