அப்பாவால் தாக்கு பிடிக்கும் வாரிசு நடிகர் : புதிய கூட்டணியால் வாழ்வு பிறக்குமா?
நடிகர் அதர்வா தனது தந்தையின் புகழால் சினிமாவிற்குள் நுழைந்தவர். இருந்தாலும், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் அளவிற்கான திரைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.
இந்நிலையில், தற்போது இயக்குனர் நெல்சன் வெங்கடேஷுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெவ்வேறு கதைகளைக் கொண்டு அமைந்திருக்கும்.
அதிலும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மான்ஸ்டர் படம் காதல், நகைச்சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட இயக்குனர் அதர்வாவை வைத்து வித்தியாசமான படத்தை கொடுக்க இருக்கிறார். இன்னும் சொல்ல போனால் அதர்வா இதுவரை ஒரு சீரியஸான கேரக்டர் தான் நடித்து வந்திருக்கிறார்.
அப்படிப்பட்ட இவருக்கு இப்படம் வேறொரு பரிமாணத்தை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. எப்படியாவது தன்னை முன்னிலை காட்டி விடமாட்டோமா என்று படாத பாடுபட்டு வருகிறார். அட்லீஸ்ட் அப்பா வாங்கிய பெயரை எடுத்து விட வேண்டும் என்று முயற்சிக்கிறார்.
மேலும் இவர் வாரிசு நடிகராக இருக்கப் போய் தான் இவ்வளவு நாளாக சினிமாவில் தாக்கு பிடிக்க முடிந்தது. இல்லை என்றால் இந்நேரம் எங்கேயோ காணாமல் போயிருந்திருப்பார் என்றே விமர்சனங்கள் வருகின்றன.