வடிவேலு கம்பேக்.. இப்படியொரு நடிப்பா.. சம்பவம் செய்தார் மாரி செல்வராஜ்….
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் மாமன்னன் என்பதை விட வடிவேலுவின் சரியான கம்பேக் படமாக மாமன்னன் மாறி உள்ளது. டைட்டில் கார்டில் இருந்தே வடிவேலுவுக்கு முன்னுரிமை கொடுத்து மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் அவரை வைத்து தரமான சம்பவத்தை செய்துள்ளார்.
எந்த இடத்திலும் பிசிறு தட்டாத நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இந்த படத்தை ஒருமுறையாவது பார்க்க வைத்து விடுவார் என்றால் அது மிகையல்ல. கண்டிப்பாக வடிவேலுவின் நடிப்புக்காகவே தாராளமாக மாமன்னன் படத்தை பார்க்கலாம்.
மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இசக்கி மாமன்னனாக மாறினால் அதுதான் இந்த படத்தின் கதை என மாரி செல்வராஜ் பேசிய நிலையில், அந்த படத்தில் இசக்கிக்கு கை போயிடுமே என்பது தொடங்கி, இசக்கி சாதி வரை ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன.
இந்நிலையில், மாமன்னன் படத்தில் இசக்கிக்கும் மாமன்னனுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அதற்கு பதில் பதினாறு வயதினிலே சப்பாணிக்கும் மாமன்னனுக்கும் தான் ஒரு ஒற்றுமை உண்டு, படத்தை பார்த்தால் அது புரியும்.
தான் பேச வந்த சமூக சமநீதி அரசியலை வடிவேலுவை வைத்து அதிகம் பேசி அசத்தி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தின் ஹீரோ என்பதை விட வடிவேலு தான் இந்த படத்தின் ஹீரோ.
உதயநிதியை ஹீரோவாக காட்ட கிளைமேக்ஸில் ஒரே ஒரு ஃபைட் வைக்கப்படுகிறது. சாவு வீட்டில் நடக்கும் பிரச்சனையில் அமைதி காப்பது, உதயநிதி வெகுண்டெழும் போதெல்லாம் ஆத்திரமும் ஆவேசமும் பலனளிக்காது. அப்பா நான் பார்த்துக்குறேன், என் பேச்சை கேளுடா என மகனை அடக்கி வைக்கும் காட்சிகளில் எல்லாம் வடிவேலுவை வைத்து மாரி செல்வராஜ் சம்பவம் செய்துள்ளார்.
அதிலும், அழகம் பெருமாளிடம் வடிவேலு தனது மகனின் நண்பர்களை ஊர் மக்கள் கல்லால் அடித்துக் கொன்று விட்டனர். அந்த 4 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சொல்லும், இடத்தில் இப்போ அது ஊர் பிரச்சனையாகி விட்டது. ஒன்றும் செய்ய முடியாது என சொல்ல, ஒரு நிமிஷம் இருங்க என சொல்லி விட்டு மலை உச்சிக்கு சென்று கொலைகாரர்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியவில்லையே தனது மகன் எழுந்து கேட்டால் என்ன பதில் சொல்வேன் என கையறு நிலையில், அழும் காட்சிகளில் அவரது நடிப்புக்கு நிச்சயம் விருதுகள் கிடைக்கும்.
மொத்தத்தில் மாமன்னன் மாபெரும் வெற்றிதான்….