யானை, புலியைத் தொடர்ந்து சிங்கத்தையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன்…

யானை, புலியைத் தொடர்ந்து சிங்கத்தையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன்…
  • PublishedJune 30, 2023

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்கிற ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. அவற்றை பொதுமக்கள் சுற்றிப்பார்ப்பதோடு, தத்தெடுக்கும் திட்டத்தையும் பூங்கா நிர்வாகம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் அங்குள்ள விலங்குகளை தத்தெடுப்பவர்கள் அதற்கான பராமரிப்புச் செலவுகளை அளிக்க வேண்டும். அவர்கள் அந்த விலங்குகளுக்கு செலவழிக்கும் தொகைக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் இதற்கு முன் யானை, புலி போன்ற விலங்குகளை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் உருவாகி வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளதால், அதற்கான புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை 2-ந் தேதி இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

இதுதவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். அதோடு இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார். அப்பட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன், சைலண்டாக சில உதவிகளையும் செய்த வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி ஆண் சிங்கம் ஒன்றை தத்தெடுத்துள்ளாராம். 3 வயதே ஆகும் ஷேரு என்கிற அந்த ஆண் சிங்கத்தை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்து இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அவர் செய்துள்ள இந்த உதவியை பூங்கா நிர்வாகம் வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *