ரெடியானது ஜவான் டீசர்… அட்லீ போட்டுள்ள பலே திட்டம்!!

ரெடியானது ஜவான் டீசர்…  அட்லீ போட்டுள்ள பலே திட்டம்!!
  • PublishedJune 30, 2023

ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இதுவரை கோலிவுட்டில் கலக்கிவந்த அட்லீக்கு ஜவான் பாலிவுட்டில் பெரிய ஓபனிங் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் படமே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் அமைந்ததால் அட்லீ செம்ம கெத்து காட்டி வருகிறார். அதேநேரம் இந்தப் படத்தை சொன்ன நேரத்தில் முடிக்காமல் இழுத்தடித்தார் அட்லீ.

இதனால், ஜூன் 2ம் தேதி வெளியாகவிருந்த ஜவான், செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு தள்ளி வைத்தது. பதான் படத்தின் ப்ரோமோஷனில் ஷாருக்கான் பிஸியானதால் தான் ஜவான் ஷூட்டிங் லேட் ஆனதாகவும் சொல்லப்படுகிறது.

அதேபோல், கிராபிக்ஸ் வேலைகளும் அதிகம் இருப்பதால் ஜவான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், அதனால் விரைவில் டீசரை வெளியிடவும் அட்லீ பிளான் செய்துள்ளாராம்.

தற்போது டீசர் எடிட்டிங்கில் கவனம் செலுத்தி வரும் அட்லீ, ஜூலை 7ம் தேதி அதனை வெளியிடலாம் என ஷாருக்கானிடம் கூறியுள்ளாராம். இதனால் ஷாருக்கானும் ஜவான் டீசரை எதிர்பார்த்து காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜூலை 7ம் தேதி டீசர் வெளியானதும், அதனைத் தொடர்ந்து சில தினங்களில் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிளும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படத்திற்காக அட்லீ, ஷாருக்கான் ஆகியோருடன் முதன்முறையாக இணைந்துள்ளார் அனிருத்.

இதனால், ஜவான் பாடல்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பான் இந்தியா படமாக உருவாகும் ஜவான் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளாராம். அதேபோல், இந்தப் படத்தின் கதை தமிழில் ஹிட் அடித்த ஒரு படத்தின் அப்டேட் வெர்ஷனாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக வெளியான பதான் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தது. இதன் காரணமாக ஜவான் படத்திற்கும் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *