பாலிவுட் நடிகையுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன்!

பாலிவுட் நடிகையுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன்!
  • PublishedJuly 1, 2023

சிவகார்த்திகேயன்  மாவீரன் படத்திற்கு பிறகு நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை இணைந்திருக்கிறாராம்.  அதாவது சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக்சன் என்டர்டைன்மென்ட் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த படத்திற்கான முதல் கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் கதாநாயகியாக யாரை தேர்வு செய்யப் போகின்றனர் என பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில்  பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளாராம்.

கடந்த ஆண்டு வெளியான சீதாராமன் படத்தில் மிருணாள் தாக்கூர் சிறப்பாக நடித்ததால் இவருக்கு எக்கச்சக்கமான தமிழ் ரசிகர் கூட்டமும் உள்ளது. அதுமட்டுமல்ல இவர் சீரியலில் இருந்து சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகையும் கூட.

எனவே திரை உலகில் படிப்படியாக தன்னுடைய வளர்ச்சியை கண்ட பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் தற்போது தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவரை வைத்து படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வேண்டிய டெஸ்ட் சூட் அனைத்தையும் முடித்துவிட்டார்.

மேலும் இவர் தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்துவார் என படக்குழுவினர் உறுதியுடன் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *