விஜயின் பேச்சை மீறி அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் வரும் ஒக்டோபரில் திரைக்குவரவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்துதான் தளபதி 68 திரைப்படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
அதாவது, லியோ படத்திற்கு பிறகுதான் தளபதி 68 குறித்த அப்டேட்டை கொடுக்க வேண்டும் என வெங்கட் பிரபுவுக்கு, விஜய் கட்டளை இட்டுள்ளார்.
ஆனால் அவரின் பேச்சையும் மீறி வெங்கட் பிரபு தளபதி 68 குறித்த அறவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் ஆயுத பூஜைக்கு லியோ படம் ரிலீஸ் ஆகிறது.
அந்த படத்திற்கு பிறகு ஒரு சில மாதங்களில் ஜாலியாகவும் கலாட்டாவாகவும் இருக்கக்கூடிய வெங்கட் பிரபுவின் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து முடித்து விடுவார். அதன் பிறகு அவர் முழுக்க முழுக்க இரண்டு வருடத்திற்கு அரசியலில் இறங்கப் போகிறார் என்ற செய்தியும் வெளியானது.
ஆனால் அதற்கெல்லாம் மாறாக இப்போது லியோ படத்தை விட தளபதி 68 படத்தில் ஒரு வருட படப்பிடிப்பில்
இணைந்து தரமான சம்பவம் செய்யப் போகிறார். ஒரு வருடம் முழுவதுமாக தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு நடைபெறப் போகிறது.
அதற்காக இந்த வருட அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.