நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியாகிய கட்டாயம் நீங்கள் பார்க்க வேண்டிய சில படங்கள்!

நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியாகிய கட்டாயம் நீங்கள் பார்க்க வேண்டிய சில படங்கள்!
  • PublishedJuly 6, 2023

நடிகர் பகத் பாசில் மலையாள சினிமா உலகிலிருந்து தன்னுடைய கலை பயணத்தை ஆரம்பித்திருந்தாலும் இன்று தென்னிந்திய ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர்களில் முன்னணியில் இருக்கிறார்.

அவ்வாறாக அவருடைய நடிப்பில் வெளியாகிய கட்டாயம் பார்க்கவேண்டிய சில படங்களை பற்றி பார்க்கலாம்.

அன்னயும் ரசூலும்: பகத் பாசில் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான திரைப்படம். ஒரு முஸ்லிம் இளைஞன் மற்றும் கிறிஸ்தவ பெண்ணுக்கு இடையே நடக்கும் காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

கும்பலாங்கி நைட்ஸ்: கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்ற திரைப்படம் கும்பலங்கி நைட்ஸ். இந்த படத்தில் பகத் பேசிய நிறைய வசனங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகின.

மாலிக்: கடந்த 2021 ஆம் ஆண்டு பகத் பாசிலின் நடிப்பில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற திரைப்படம் மாலிக் .

பெங்களூர் டேஸ்: பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்துள்ள இந்த படம் இளசுகளின் பேவரிட் என்றே சொல்ல வேண்டும்.

ஜோஜி: பணக்கார அப்பாவின் மூன்று மகன்களும் தங்களுடைய நடுத்தர வயதை கடந்த பின்னும் அப்பாவுக்கு பயந்து வாழ்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் கடைசி மகன் ஜோஜி குதிரை பந்தயத்தில் எல்லா பணத்தையும் தோற்றுப் போவதால் அதன் பின்னர் நடக்கும் விளைவுகளை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. எ

தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும்: பகத் பாசிலின் சிறந்த நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் தான் தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *