இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அசைக்க முடியாது – வேட்டையாடு விளையாடு படத்தின் வெற்றிக்கொண்டாட்டம்!

இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அசைக்க முடியாது  – வேட்டையாடு விளையாடு படத்தின் வெற்றிக்கொண்டாட்டம்!
  • PublishedJuly 12, 2023

உலக நாயகனின் படங்கள் காலம் தாண்டி தான் பேசப்படும் என்பதற்கு உதாரணமாக இப்பொழுது வேட்டையாடு விளையாடு படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இந்த சமயத்தில் பல புது படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் கமலின் வேட்டையாடு விளையாடு படத்தை பார்க்க தான் ஆர்வமாக சென்றிருக்கிறார்கள். அடுத்தடுத்து இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக கமல் நடித்திருப்பார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வேட்டையாடு விளையாடு படம் வெளியாகி இருந்தது.

vettaiyaadu-vilaiyaadu

அப்போது இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது உள்ள தொழில்நுட்பத்தால் சில மாற்றங்கள் செய்து வேட்டையாடு விளையாடு படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு பெரிய அளவில் இருக்கிறது. அதுவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹவுஸ் ஃபுல்லாக தியேட்டர்கள் இருந்து வருகிறது. இதன் மூலம் வேட்டையாடு விளையாடு படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இதை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *