வியாபாரத்தில் மிரட்டும் லியோ… புதிய அப்டேட் இதோ….
லியோ படத்தின் தெலுங்கு உரிமத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்விக்கு பிறகு லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய்.
விக்ரம் படத்தின் மெகா ஹிட் லோகேஷ் கனகராஜ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருப்பதால் இந்தப் படத்தை ஒட்டுமொத்த கோலிவுட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
ஒரு படத்தில் மூன்று நட்சத்திரங்களை வைத்து சமாளிப்பதே பெரிய வேலை என்று டாக் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் லியோவிலோ சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மாத்யூ தாமஸ், த்ரிஷா, மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
தனுஷும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக புதிய தகவலும் வெளியாகியிருந்தது. ஆனால் அது வதந்திதான் என உறுதி செய்யப்பட்டது.
காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் அதன் பிறகு சென்னையில் அவுட்டோரிலும், ஸ்டூடியோவிலும் நடந்துவந்தது. ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு 500க்கும் மேற்பட்டவர்கள் நடனம் ஆடிய நா ரெடிதான் பாடல் ஷூட் செய்யப்பட்டது.
இதனையடுத்து திருப்பதியில் ஷூட்டிங் நடந்ததாக கூறப்பட்டது. அங்கு விஜய் உள்ளிட்டோர் நடித்தனர். இந்தச் சூழலில் விஜய்க்கான போர்ஷன் முடிந்துவிட்டதாக லோகேஷ் கனகராஜ் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
அதேபோல் லியோ படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை லோகேஷ் தொடங்கவிருக்கிறார்.
விஜய்யும் தனக்குரிய பகுதிக்கான டப்பிங்கை இன்னும் சில நாட்களில் கொடுத்து முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் வியாபாரம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி,தெலுங்கு திரையரங்க உரிமை மட்டுமே ரூ. 25 கோடி வரை விற்பனை ஆகியுள்ளது என கூறப்படுகிறது.
முன்னதாக சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ, திரையரங்க உரிமைகள் என அனைத்தையும் சேர்த்து லியோ திரைப்படத்தின் பிஸ்னஸ் ரூ. 400 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கவனம் ஈர்த்த முதல் சிங்கிள்: இதற்கிடையே விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் 22ஆம் தேதி நா ரெடிதான் பாடல் வெளியானது. அந்தப் பாடல் வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருசேர சந்தித்தது.
இருப்பினும் பாடலில் விஜய்யின் லுக்கும், நடனமும் பெரிதும் பேசப்பட்டது. எனவே அந்தப் பாடலை திரையில் பார்ப்பதர்கு ரசிகரள் பேரார்வத்துடன் உள்ளனர். அதேபோல் படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப்புகள் என்றும் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.