‘ஜெயிலர்’ படத்தின் ‘ஹுக்கும்’ வெளியாகும் திகதிஅறிவிப்பு!

‘ஜெயிலர்’ படத்தின் ‘ஹுக்கும்’ வெளியாகும் திகதிஅறிவிப்பு!
  • PublishedJuly 13, 2023

ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘ஹுக்கும்’ லிரிக்கல் பாடல் ரிலீஸ் ஆகும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்ஷம் ஒருபுறம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, படத்தின் ப்ரோமோஷன் பணியிலும் முழு மூச்சியில் இறங்கி உள்ளது படக்குழு.

படம் ரிலீசாக இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், கடந்த வாரம் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட, காவாலா பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் இரண்டாவது சிக்கில் பாடலின் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்த நிலையில், ‘ஹுக்கும்’ என்கிற இந்த பாடல் வரும் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தலைவரின் மாஸ் போட்டாருடன் படக்குழு தெரிவித்துள்ளது.

முதல் பாடலான காவாலா கலர்ஃபுல்லாகவும், ரணகளமாகவும் இருந்த நிலையில் இரண்டாவது பாடல் தலைவரின் என்ட்ரி பாடலாக இருக்கும் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *