இணையத்தில் வைரலாகும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் போஸ்டர்!

இணையத்தில் வைரலாகும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் போஸ்டர்!
  • PublishedJuly 19, 2023

ஆதிபுருஷ் கொடுத்த மரண அடியால் துவண்டு போயிருந்த பிரபாஸ் இப்போது ப்ராஜெக்ட் கே மூலம் புத்துணர்ச்சி பெற்று இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் உலக நாயகன் இதில் நடிக்க இருப்பது மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் அமிதாப் பச்சன்,  தீபிகா படுகோன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைந்திருப்பதும் பெரும் எதிர்பார்ப்பை கொடுத்திருந்தது.

அதை அதிகரிக்கும் வகையில் பட குழு இப்போது கலிபோர்னியாவில் நடைபெறும் காமிக் கான் நிகழ்வில் வாட் இஸ் ப்ராஜெக்ட் கே என்ற நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறது.

நாளை கோலாகலமாக நடைபெறும் இந்த நிகழ்வுக்காக தற்போது கமல்ஹாசன் உட்பட பட குழுவினர் அனைவரும் அமெரிக்காவுக்கு பறந்துள்ளனர்.

இந்நிலையில் பட குழு ஒரு போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தீபிகா படுகோனின் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது பிரபாஸின் கேரக்டர் பற்றிய போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகிறது.

project k-prabhas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *