“LOVE” படக்குழுவினருடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடினார் பரத்

“LOVE” படக்குழுவினருடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடினார் பரத்
  • PublishedJuly 21, 2023

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பரத் தனது 50வது படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் புலி முருகன், லூசிபர், குரூப், சல்யூட் ஆகிய படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றிய ஆர்.பி பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ரொன்னி ரெபல் இசையமைத்துள்ளார். ஆர்பி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

க்ரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் பரத் இன்று தனது பிறந்தநாளை ‘லவ்’ படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடினார்.

அப்போது கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வில் வாணிபோஜன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *