ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டை நடத்தும்‘இந்தியன் 2’

ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டை நடத்தும்‘இந்தியன் 2’
  • PublishedJuly 22, 2023

இந்தியன் 2’ திரைப்படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

‘இந்தியன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2‘ உருவாகி வருகிறது. ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவாகி இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

தென்னிந்தியாவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா, மனோபாலா, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முதலில் தொடங்கிய படப்பிடிப்பு சில காரணங்களால் நடுவில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் உரிமையை பெறுவதற்காக சுமார் 220 கோடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதவிர மற்ற உரிமைகளை விற்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுமார் 250 கோடியில் உருவாகி வரும் இந்த படம் ரிலீஸ் முன்னரே 90 சதவீத முதலீட்டை ஈட்டியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் திரையரங்கில் வெளியானால் வசூலை குவிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *