முதல்முறையாக திரைப்படத்தில் நடிக்கின்றார் தல தோனி? அதுவும் தமிழ் படத்தில் என தகவல்…..
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘LGM’ படத்தில் தல தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான காதல் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘LGM’. இந்த படத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘லவ் டுடே’ நாயகி இவானா நடித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கி்யுள்ளார்.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானாவோடு இணைந்து நடிகை நதியா, காமெடி நடிகர் யோகிபாபு, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்க்ளில் நடித்துள்ளனர்.
அம்மா மற்றும் வருங்கால மனைவி இடையே சிக்கி தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தை கொண்டது இந்த படம். வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.