75 கோடியை வசூல் செய்தது மாவீரன்… படக்குனு கெட்ட வார்த்தையில் திட்டிய ப்ளூ சட்டை மாறன்

75 கோடியை வசூல் செய்தது மாவீரன்… படக்குனு கெட்ட வார்த்தையில் திட்டிய ப்ளூ சட்டை மாறன்
  • PublishedJuly 25, 2023

சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இல்லாத அளவில் ஒரு மாபெரும் வரவேற்பு மாவீரன் படத்திற்கு இருந்தது. மேலும் இந்த படத்தை பார்த்த பல பிரபலங்களும் இந்த படம் குறித்து நல்ல கருத்துக்களையே கூறினர்.

விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் மாவீரன் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது மாவீரன் படத்தின் கலெக்ஷன் குறித்து சில தகவல்களை வெளியிட்டு இருந்தது. அதில் மாவீரன் திரைப்படம் இதுவரை சுமார் 75 கோடி வரை வசூல் செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

தற்போது இதை மேற்கோள்காட்டி ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அந்த பதிவில் அவர் OVOP கூறியுள்ளார். இணையதள மொழியை பொறுத்தவரை OVOP என்பது மிகப்பெரிய கெட்டவார்த்தை என்பதை பலர் அறிவர்.

மாவீரன் படத்தின் வசூலை குறித்து ப்ளூ சட்டை மாறன் இப்படி ஒரு கமெண்ட்டை செய்த நிலையில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *