‘கங்குவா’… தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்

‘கங்குவா’… தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்
  • PublishedJuly 27, 2023

‘கங்குவா‘ படத்தை இரண்டு சர்வதேச மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக ‘கங்குவா’ மாறியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் மாஸாக நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது.

இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 5-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.

kanguva

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.  சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெங்காலி, ஒரியா, பஞ்சாமி, மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும், இரு சர்வதேச மொழியிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *