“நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்” வைரலாகும் ரஷ்மிகா மந்தனாவின் வீடியோ… அதிர்ச்சியில் ரசிகர்கள்

“நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்” வைரலாகும் ரஷ்மிகா மந்தனாவின் வீடியோ… அதிர்ச்சியில் ரசிகர்கள்
  • PublishedJuly 27, 2023

தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் முன்னணி நடிகையான ரஷ்மிகா மந்தனாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல ஊகங்கள் உள்ளன. எவ்வாறாயினும், ஒரு கற்பனையான கார்ட்டூன் கதாப்பாத்திரத்துடன் தனது ரகசிய திருமணம் குறித்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ படத்திலும், ‘வரிசு’ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலமும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்.

சமீப காலமாக பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ரஷ்மிகா தற்போது நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘அனிமல்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

மங்கா ஹீரோவான நருடோ உசுமாகியை நீங்கள் ரகசிய திருமணம் செய்தது உண்மையா? என்று ரஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பப்ட்டுள்ளது.

மசாஷி கிஷிமோட்டோவால் உருவாக்கப்பட்ட “மங்கா நருடோ”வின் கதாநாயகன் தான் நருடோ உசுமாகி. கார்டூன் தொடரான இந்த பாத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் நிஞ்ஜாவை குறிக்கின்றது.

ரஷ்மிகா மந்தனா வழக்கமான நகைச்சுவையான தொனியில் பதிலளித்தார்,

‘நருடோவுக்கு என் இதயம் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் அது. அந்த கேரக்டரையே நான் முழுமையாக திருமணம் செய்து கொண்டேன். நருடோவின் பிரியமான ‘ஹினாட்டா’ ஆக வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார், மேலும் அனிமேஷன் ஹீரோயின் போன்று ஊதா நிற முடியை வைத்திருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இந்த வீடியோவுடன், நருடோ நிஞ்ஜா போர்வீரனைப் போல தோற்றமளிக்கும் பொம்மையுடன் நடிகையின் படமும் வைரலாகி வருகிறது.

குழந்தைகள் முதல் பிரபலங்கள் வரை பலரும் கார்ட்டூன் கேரக்டர்களில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், நருடோவை ரகசியமாக திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு தனக்கு நருடோவை மிகவும் பிடிக்கும் என நடிகை ராஷ்மிகா கூறியுள்ள செய்தி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *