கூறுகெட்டத்தனமா பேசக்கூடாது… ரஜினியை விளாசிய பிரபல விமர்சகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இம்மாதம் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றது. இதில் ரஜினிகாந்த் பேசியதற்கு பயில்வான் ரங்கநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெயில் இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், பயில்வான் ரங்கநாதன் ரஜினியின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் எதை பேச வேண்டும், எதற்காக பேச வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் கூறுகெட்டுத்தனமா பேசி இருக்கிறார்.
முதலில் நெல்சனை அசிங்கப்படுத்தினார். அவரிடம் கதை 10 மணிக்கு கதை சொல்ல வர சொன்னா 12 மணிக்கு வராரு. வந்தும் கதை சொல்லாமல் சூப்பரா காபி கேட்டாரு, அதற்கு பிறகு, காவாலா பாட்டுக்கு செம ஸ்டெப் இருக்குனு சொல்லிட்டு இரண்டே இரண்டு மூமண்டுதான் கொடுத்தாரு என்று அசிங்கப்படுத்திவிட்டு பிறகு படப்பிடிப்பில் ஹிட்லர் மாதிரி இருப்பாரு என்று தடவிக்கொடுக்கிறார்.
பின், குடிக்கு நான் அடியாகி இருந்தேன், அந்த கெட்டப்பழக்கம் மட்டும் இல்லை என்றால் இன்னும் நான் புகழின் உச்சிக்கு சென்று இருப்பேன் என்று கூறிய ரஜினி, ஜாலியாக இருக்கணும்னு கொஞ்சமாக குடிங்க என்று சொல்லாமா, நீங்களே இப்படி சொன்னால், ரசிகர்கள் ஜாலிக்காக குடிக்கிறேன் என்று சொல்லி குடிக்க மாட்டார்களே.
அதே போல, குட்டி கதை சொல்லுகிறேன் என்று காக்கா கழுகு கதை சொன்னாரு, அந்த கதையை எதுக்கு சொன்னாரு என்றே தெரியவில்லை. பின் தடித்த வார்த்தையால், குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை.
நாம வேலைய பாத்துட்டு நேரா போயிட்டே இருக்கனும் என்று பேசி இருந்தார். எதற்கு இப்படி கூறுகெட்டத்தனமாக பேசியிருந்தார் என்று எனக்கு தெரியவில்லை. இவரை பற்றியும் இவரது குடும்பத்தை பற்றி எழுதும் பத்திரிக்கையாளர்களை நாய் என்கிறாரா?
இந்த வயதில் ரஜினி இப்படி தடம் மாறி பேசுகிறாரே என்ற ஆதங்கத்தில் தான் இப்படி பேசுகிறேன். மற்றபடி ரஜினி என்று, எனக்கு நண்பர் தான் என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.