பிளாக் பாஸ்டர் ஹிட் வெற்றியை கொண்டாடும் “டிடி ரிட்டர்ன்ஸ்” டீம்

பிளாக் பாஸ்டர் ஹிட் வெற்றியை கொண்டாடும்  “டிடி ரிட்டர்ன்ஸ்” டீம்
  • PublishedAugust 1, 2023

சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் “டிடி ரிட்டர்ன்ஸ்”. இப்படம் காமெடி கலக்கலாக இருக்க நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் வெளிவந்த 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளதாம்.

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் மிகப்பெரும் வசூலை கொடுத்த படமாக டிடி ரிட்டர்ன்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சந்தனாம் மார்க்கெட் இதன் மூலம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் வெற்றி குறித்து சந்தானம் கூறியிருப்பதாவது,

“டிடி ரிட்டர்ன்ஸ்” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை கே.செந்தில் குழு மற்றும் ஆர்.கே என்டர்டெயின்மென்ட் இணைந்தது கொண்டாடியுள்ளனர்.

இந்த இரு அணிகளுடனும் பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு மரியாதை, மேலும் பல வெற்றிகரமான ஒத்துழைப்புகளை எதிர்காலத்தில் எதிர்பார்க்கிறோம்” என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *