ஜவான் படத்தில் தீபிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? நம்ம நயனுக்கு இவ்வளவு தானா?

ஜவான் படத்தில் தீபிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? நம்ம நயனுக்கு இவ்வளவு தானா?
  • PublishedAugust 2, 2023

பாலிவுட் நடிகர் ஷாருகானின் பதான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மெகா ஹிட்டானது. சுமார் 225 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதையடுத்து, இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருகான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மற்றுமொரு படம் ஜவான்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ள ஜவான் திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அட்லீ படம் என்றாலே மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அதிலும் தற்போது ஷாருகான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து பட இயக்கியுள்ளது மிக பெரிய எதிர்பார்ப்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் எழவைத்துள்ளது.

அதேபோல் நயன்தாரா முதன் முதலாக பாலிவுட் கிங் ஷாருகானுடன் ஜோடியாக நடிக்க, தமிழில் வில்லின் கதாபாத்திரத்தில் கலக்கும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் சினிமாவிலும் வில்லனாக களம் இறங்கியுள்ளது என்று படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அந்தவகையில் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். இதனால் ஜவான் படத்தில் நடிக்க தீபிகாவிக்கு சுமார் 20 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் இப்படத்தின் ஹீரோயின் நயன்தாராவுக்கு 11 கோடி ரூபாய் தான் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் தீபிகாவுக்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *