அவருடைய கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதிதான் சரி.. யார் அவர் தெரியுமா ?
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருப்பவர் சித்தராமையா. மைசூரு மாவட்டம் வருணா அருகே உள்ள சித்தராமய்யனஹுண்டி கிராமத்தில் பிறந்தவர் சித்தராமையா. குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதில் படிக்காமல் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அவரை ஆசிரியல் ஒருவர் பள்ளி சேர்த்து படிக்க வைத்தார்.
இதையடுத்து படிப்பில் நன்கு கவனம் செலுத்தி சட்டம் பயின்றார். அதன்பிறகு வழக்கறிஞராக பணியாற்ற வந்த அவர், சமூகத்தில் மாற்றம் கொண்டு வர சமூக நீதிக்கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் படிப்படியாக எம்.எல்.ஏ, அமைச்சர் என வேகமாக வளர்ந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி சித்தராமையாவை முதல்வராக்கியது. அவரது ஆட்சிக்காலத்தில் ஏராளமான சமூக புரட்சிகளை செய்தார். இதனால் கர்நாடக மக்களிடையே சித்தராமையாவிற்கு நற்பெயர் இருக்கிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக நடிகரை படக்குழு தேடி வந்ததது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி பொறுத்தமாக இருப்பார் என்பதால் அவரையே சித்தராமையாவாக நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தை சத்யா ரத்னம் என்பவர் இயக்கவுள்ளார்.
கடந்த 7 மாதங்களாக முதற்கட்ட பணிகள் நடைபெற்ற வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் க்ளைமேக்ஸில் மட்டும் சித்தராமையா தோன்றவுள்ளார்.
இந்த படத்திற்கு ‘லீடர் ராமையா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன் டேக் லைனாக ஏ கிங் ரைஸ்டு பை பிபிள் (A King Raised by the People) என வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.