கமலஹாசன் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் படம் தொடர்பான புதிய அறிவிப்பு

கமலஹாசன் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் படம் தொடர்பான புதிய அறிவிப்பு
  • PublishedAugust 8, 2023

‘மாவீரன்’  படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் நடிகர் சிவகாரத்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.

‘எஸ்கே 21’ என்று அழைக்கப்படும் இந்த படத்தை  கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

sk21

இப்படத்தை ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். ராணுவ கதைக்களம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வட இந்தியாவில் நடைபெற உள்ளது.

sk21

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *