ஜெயிலர் விமர்சனம்… ப்ளூ சட்டை மாறன் அதகள ட்வீட்
ஜெயிலர் படம் வெளியாகியிருக்கும் சூழலில் அதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் செய்திருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 900 திரைகளில் ஜெயிலர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் உலகளவில் 4000 ஸ்க்ரீன்களில் ஜெயிலர் திரையிடப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகள் இல்லாததால் வெளிமாநிலத்திலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் அதிகாலையிலேயே ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டனர். படத்தை பார்த்தவர்கள் ஜெயிலரில் நெல்சன் திலீப்குமாரும், ரஜினிகாந்த்தும் கம்பேக் கொடுத்துவிட்டார்கள். இதன் மூலம் தான் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினி உணர்த்திவிட்டார் என பதிவிட்டுவருகின்றனர்.
இந்தச் சூழலில் சமீப காலமாக ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்துவரும் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படம் குறித்து ட்வீட் செய்திருக்கிறார்.
அதாவது ஒரு ரசிகர் பழைய ரஜினி படத்துக்கு ஒரு விமர்சனம் கொடுக்கிறார். அந்த விமர்சனத்தில் முதல் பாதி 100 நாட்கள் ஓடும்; இரண்டாம் பாதி 500 நாட்கள் ஓடும் என குறிப்பிடுகிறார்.
அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மாறன், “ஜெயிலரின் முதல் விமர்சனம் வெளியானது. முதல் பாதி 100 நாட்கள். இரண்டாம் பாதி 500 நாட்கள். என்ன ஒரு கணிப்பு. என்ன ஒரு எண்ட்டெர்டெயினர். இதுதான் 70ஸ் கிட் என்பது” என குறிப்பிட்டிருக்கிறார்.
Jailer – First review is OUT.
1st half 100 days. Second half 500 days. What a calculation. What a entertainer.. this 70s kid is. ROFL.
Check next tweet.#Jailer. pic.twitter.com/6NBKAPx4sG
— Blue Sattai Maran (@tamiltalkies) August 10, 2023