ரோலக்சுக்கு போட்டியாக வந்த ஹரால்ட் தாஸ்.. லியோ கொடுத்த சப்ரைஸ்

ரோலக்சுக்கு போட்டியாக வந்த ஹரால்ட் தாஸ்.. லியோ கொடுத்த சப்ரைஸ்
  • PublishedAugust 15, 2023

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அசத்தலான அப்டேட் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிலும் ஹரால்ட் தாஸ் வரப்போகிறார் என்று வெளியான அறிவிப்பை பார்த்ததுமே ரசிகர்கள் குஷியானார்கள்.

ஏனென்றால் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்த நாளான இன்று அவருக்கான சர்ப்ரைஸ் ஒன்று வீடியோவாக வெளிவரும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.

அதாவது சமீபத்தில் சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு லியோ பட குழு தரமான ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது. அதை தொடர்ந்து இன்று ஹரால்ட் தாஸ் தரிசனத்திற்காக ரசிகர்கள் காலை முதலே காத்திருக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.

அதன்படி காரில் இருந்து கெத்தாக இறங்கும் அர்ஜுன் ரோலக்சுக்கு போட்டியாக வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். வெறித்தனமாக ஒருவரின் கையை வெட்டுவது போல் அவருடைய இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

அதிலும் வாயில் சிகரட்டை வைத்துக் கொண்டு இருக்கும் அவருடைய லுக் வேற லெவலில் இருக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *