ஜெயிலர் வசூலை தாங்க முடியாத ப்ளூ சட்டை மாறன்… என்ன சொல்லி இருக்கார் பாருங்க…

ஜெயிலர் வசூலை தாங்க முடியாத ப்ளூ சட்டை மாறன்… என்ன சொல்லி இருக்கார் பாருங்க…
  • PublishedAugust 17, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே அந்த படத்திற்கு நெகட்டிவிட்டி பரப்பி வந்தவர் தான் திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.

இந்த படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ என்ற பெயரில் ரஜினியை தவிர மற்ற எல்லோரும் தான் நன்றாக நடித்து இருக்கிறார்கள் என்றார்.

இப்பொழுது ஜெயிலர் படம் உலகம் முழுவதும் தாறுமாறான வசூலை குவித்து கொண்டிருக்கிறது இதை ஜீரணிக்க முடியாத ப்ளூ சட்டை ஜெயிலர் படத்தின் கலெக்சன் ரிப்போர்ட் எல்லாம் பொய் என்கிறார்.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இருக்கு ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட இன்னமும் தைரியம் வரவில்லை.

அதற்கு முன்பே நீங்கள் எல்லாம் ஏன் இப்படி வடை சுடுகிறீர்கள் என்று காட்டமாக பேசி வருகிறார். அதுவும் ஏழு நாட்களில் 450 கோடியை ஜெயிலர் வசூலை குவித்து இருக்கிறது என்ற விஷயத்தை தெரிந்ததும் ப்ளூ சட்டை மாறனால் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

ப்ளூ சட்டை மாறன் பேசுவதில் இருந்து இவர் ரஜினியை வெறுக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இவருக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் அவ்வப்போது தங்களது சரவெடியான பதிலை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படியும் அடங்காத ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ஜெயிலர் படத்தைக் குறித்து எதிர்வலைகளை தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *