இயக்குனராக களமிறங்குகின்றார் விஜய்யின் மகன் : லைகா வெளியிட்ட உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது ‛லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க போகிறார்.
இவரது மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாடுகளில் சினிமா தொடர்பான படிப்பை படித்தவர்.
ஏற்கனவே குறும்படங்கள் சில இயக்கி உள்ளார். தனது தந்தையுடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் ஆடி உள்ளார்.
தாத்தா, அப்பாவை போல் இவருக்கும் சினிமா மீது தான் ஆர்வம். அப்பா விஜய்யை போல் ஹீரோவாக களமிறங்காமல் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல் இயக்குனராக களமிறங்கி உள்ளார்.
இவரின் முதல் பட இயக்கத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
லைகாவின் சுபாஸ்கரன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த புகைப்படங்களை அந்நிறுவனம் வெளியிட்டு ஜேசன் விஜய்யை இயக்குனராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்துள்ளனர்.
We are beyond excited 🤩 & proud 😌 to introduce #JasonSanjay in his Directorial Debut 🎬 We wish him a career filled with success & contentment 🤗 carrying forward the legacy! 🌟#LycaProductionsNext #JasonSanjayDirectorialDebut @SureshChandraa @DoneChannel1 @gkmtamilkumaran… pic.twitter.com/wkqGRMgriN
— Lyca Productions (@LycaProductions) August 28, 2023