விஜய்க்காக இணையும் கமல், விக்ரம், தனுஷ்… தரமான சம்பவம் காத்திருப்பு

விஜய்க்காக இணையும் கமல், விக்ரம், தனுஷ்… தரமான சம்பவம் காத்திருப்பு
  • PublishedAugust 30, 2023

விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இதில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, லியோ இசை வெளியீட்டு விழாவில், உலகநாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், தனுஷ் மூவரும் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் திரைப்படம் மூலம் கமல்ஹாசனுக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்தார் லோகேஷ். அதேபோல், விரைவில் விக்ரம், தனுஷ் ஆகியோரின் படங்களையும் லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையெல்லாம் பிளான் செய்து தான், லியோ இசை வெளியீட்டு விழாவில் கமல், விக்ரம், தனுஷ் மூவருக்கும் அழைப்புவிடுத்துள்ளாராம் லோகேஷ்.

இதற்கு விஜய்யும் ஓக்கே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. அதேநேரம், கமல், விக்ரம், தனுஷ் தரப்பில் இருந்தும் விரைவில் க்ரீன் சிக்னல் கிடைக்கும் என படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. அப்படி அவர்கள் கலந்துகொள்ளவிருந்தால், லியோ இசை வெளியீட்டு விழாவில் தரமான சம்பவங்களை எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *