உலகப் புகழ்பெற்ற டைம் ஸ்கொயர் சதுக்கத்தில் இலங்கைப் பெண் யொஹானி….

உலகப் புகழ்பெற்ற டைம் ஸ்கொயர் சதுக்கத்தில் இலங்கைப் பெண் யொஹானி….
  • PublishedAugust 9, 2023

நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம் ஸ்கொயர் சதுக்கத்தில் இலங்கைப் பாடகி யொஹானியின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, உலகெங்கிலும் உள்ள எனது இலங்கையின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என யொஹானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் எனது இசையைப் பகிர்ந்து கொள்வதற்கான இந்த அற்புதமான வாய்ப்புக்காகவும், நமது கலாச்சாரம் மற்றும் இசை இங்கு கொண்டாடப்படுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் spotifylkவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஜூன் முதலாம் திகதியும், யொஹானியின் புகைப்படம் கனடாவில் Toronto Eaton Centreஇலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *