“காவாலா” காய்ச்சல் முடிந்தது… தமன்னாவோட அடுத்த தரமான சம்பவம் வந்துடுச்சு…

“காவாலா” காய்ச்சல் முடிந்தது… தமன்னாவோட அடுத்த தரமான சம்பவம் வந்துடுச்சு…
  • PublishedJuly 25, 2024

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டதை தொடர்ந்து நடிகை தமன்னாவும் வரிசையாக கவர்ச்சி டான்ஸ் ஆடி இளைஞர்களுக்கு கிளாமர் ட்ரீட் கொடுத்து வருகிறார்.

ஜெயிலர் படத்தை விட தாறுமாறான டான்ஸை ஸ்ட்ரீ 2 எனும் இந்தி படத்திற்காக தமன்னா போட்டுள்ளார்.

ஜெயிலர் படத்துக்கு பெரிய ஹைப்பே இல்லாமல் இருந்த நிலையில், அனிருத் இசையில் தமன்னா தாறுமாறாக நடனமாடிய காவாலா பாடல் தான் அந்த படத்திற்கு முதல் புரமோஷனாக அமைந்தது. அதன் பின்னர், ஹுகும் உள்ளிட்ட பாடல்கள் படத்திற்கான ஹைப்பை எகிறச் செய்தன.

அடுத்ததாக சுந்தர். சி இயக்கி நடித்த அரண்மனை 4 படத்தில் தமன்னா சேலை கட்டிய குழந்தைகளுக்கு அம்மாவாகவும் இறந்து போன ஆவியாகவும் நடித்திருந்தார். ராஷி கன்னா கூட படத்தில் பெரிதாக கிளாமராக நடிக்காத நிலையில், அந்த 2 நடிகைகளையும் வைத்து படத்துக்கான புரமோஷன் பாடலாக அச்சச்சோ பாடலை உருவாக்கி கிளைமேக்ஸில் போட்டு படம் முடிந்தும் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு செய்து விட்டார் சுந்தர். சி. தமன்னாவின் டிரெஸ் மற்றும் டான்ஸ் என அந்த பாடலிலும் கலக்கு கலக்கி விட்டார்.

இந்த நிலையில், அமர் கெளசிக் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ஸ்ட்ரீ 2 படத்தில் தமன்னா நடனமாடிய புதிய பாடல் வீடியோ இன்று வெளியாகி இணையத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது.

தமன்னாவின் ரசிகர்கள் ரிப்பீட் மோடில் அந்த பாடலை பார்த்து உற்சாகமடைந்து வருகின்றனர். ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஸ்ட்ரீ 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *