100 கோடி வசூல் அள்ளிய ஆவேஷம்… ஓடிடிக்கு வருகிறதா?

100 கோடி வசூல் அள்ளிய ஆவேஷம்… ஓடிடிக்கு வருகிறதா?
  • PublishedApril 26, 2024

ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் ஹீரோவாக நடித்த ஆவேஷம் திரைப்படம் தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தற்போது பகத் பாசில் நடிப்பில் தமிழில் வேட்டையன் படம் உருவாகி வருகிறது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வருகிறார் பகத் பாசில்.

இதுதவிர வடிவேலு உடன் இணைந்தும் ஒரு படத்தில் நடிக்கிறார். மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பகத் பாசில்.

ஆவேஷம் திரைப்படத்திற்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்து இருந்தது.

திரையரங்கில் சக்கைபோடு போட்டு வரும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே மாதம் 17-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *