காதலர் தினத்தில் புதுக் காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்

காதலர் தினத்தில் புதுக் காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்
  • PublishedFebruary 14, 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அபிஷேக் ராஜா, தன்னுடைய புது காதலியை காதலர் தினமான இன்று அறிமுகப்படுத்தி உள்ளார்.

யூடியூப்பில் சினிமா விமர்சகராக இருந்த அபிஷேக் ராஜா, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்வக்கோளாறில் இவர் செய்த பல விஷயங்கள் மிகவும் கிரிஞ்ச் ஆக இருந்ததால் நெட்டிசன்களின் ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறினார் அபிஷேக் ராஜா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 முறை எலிமினேட் ஆன இவர், அந்நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி இயக்குனராகவும் காலடி எடுத்து வைத்துள்ளார் அபிஷேக். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஆல்பம் பாடலை இயக்கி இருந்தார். இப்படி சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வரும் அபிஷேக் ராஜா, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தன்னுடைய பெற்றோர் பற்றியும், தன்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது பற்றியும் உருக்கமாக பேசி இருந்தார். ஆனால் விவாகரத்துக்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.

இதையடுத்து அந்த சமயத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அபிஷேக் ராஜாவின் முதல் மனைவி தீபா, அபிஷேக் தன்னை அடித்து துன்புறுத்தியதால் தான் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில், தீபாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் மீண்டும் காதலில் விழுந்துள்ளார் அபிஷேக். அவர் தன்னுடைய புது காதலியை காதலர் தினமான இன்று அறிமுகப்படுத்தி உள்ளார்.

அதன்படி தன்னுடைய புது காதலி உடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அபிஷேக் ராஜா, அதில் குறைகள் உள்ள என்னை ஒரு பார்ட்னராக மாற்றியதற்கும் என்னை விட்டுக்கொடுக்காததற்கும் நன்றி. இனிய காதலர் தின வாழ்த்துக்கள் சுவாதி. நான் ஏன் பார்ட்டிக்கு பின்னர் ஆதிபுருஷ் பிரபாஸ் போல இருக்கிறேன் என தெரியவில்லை என குறிப்பிட்டு உள்ளார். அபிஷேக் ராஜாவின் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *