அது தான் அவர் வெற்றிக்கு காரணம்…ஆதிக் ரவிச்சந்திரன்

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக அஜித்துடன் நடித்துள்ளார்.
மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து இம்மாதம் இறுதியில் இப்படத்தின் டிரைலர் வெளிவரவுள்ளது. புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித் குறித்து தற்போது லிங்குசாமி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” இன்று அஜித் சினிமாவில் பிடித்திருக்கும் இடம் குறித்து முன்பே அவர் என்னிடம் கூறியுள்ளார். ஒரு நாள் படத்தின் சூட்டிங்கின்போது கேரவனில் பேசி கொண்டு இருந்தோம்.
அப்போது அவர் என்னிடம் ‘ஜி நம்மதான் ஜி, முதல் இடத்தில் நம்மதான் ஜி வருவோம்’ என்று கூறுவார். டப்பிங்கில் 50 தடவை பேச சொன்னாலும் பேசுவார்.
அது தான் அவர் வெற்றிக்கு காரணம். அவர் சொன்னது போல இன்று முதல் இடத்தில் உள்ளார்” என்று கூறியுள்ளார்