33கோடி சொத்துக்கு வாரிசுடன் திருமணத்திற்கு ரெடி ஆகும் அனிருத்

33கோடி சொத்துக்கு வாரிசுடன் திருமணத்திற்கு ரெடி ஆகும் அனிருத்
  • PublishedJune 14, 2025

தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் இசையமைப்பாளர் அனிருத். 16 வயதில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் தன் இசையை மக்களிடம் கொண்டு சென்றார்.

தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் அனிருத், பாடகி ஆண்ட்ரியாவை காதலித்து பின் பிரிந்துவிட்டார் என்ற செய்திகள் வெளியானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அதன்பின் அனிருத், பல நடிகைகளுடனும் பாடகிகளுடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பாடகி ஜோனிடா காந்தியை கூட திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் அனிருத் திருமணம் குறித்த ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அனிருத், ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அந்த பெண் 33 ஆயிரம் கோடிக்கு வாரிசு என்றும் அவரின் தனிப்பட்ட சொத்து மட்டுமே 400 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *