ஜனநாயகன் படம் குறித்த ஒரு சீக்ரெட்டை பகிர்ந்த பாலாஜி

ஜனநாயகன் படம் குறித்த ஒரு சீக்ரெட்டை பகிர்ந்த பாலாஜி
  • PublishedJune 26, 2025

நடிகர் விஜய்யின் கடைசி படமாக இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜனநாயகன். முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் ரோர் வீடியோ விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிட்டது படக்குழு. பர்ஸ்ட் ரோர் வீடியோ வெளியாகி 24 மணிநேரத்துல் 32.4 மில்லியன் ரியல் டைம் பார்வைகளை பெற்று அதிக பார்வைகளை பெற்ற முதல் தமிழ் படம் என்ற சாதனையை ஜனநாயகன் பட பர்ஸ்ட் ரோர் வீடியோ பெற்றது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்த பேட்டியொன்றில் ஜனநாயகன் படம் குறித்த ஒரு சீக்ரெட் விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் என்பதால், ஜனநாயகன் படத்தை பற்றிய அப்டேட்டை அதுவரை வெளியில் சொல்ல வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டாராம். எனவே அப்படத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். ஜனநாயகன் படத்தின் விஜய்யின் முழு போர்ஷனை எடுத்து முடித்துள்ளனர்.

கடைசி நாளில் அவருக்கு ஃபேர்வெல் செய்யலாம் என்று நினைத்துள்ளனர். ஆனால் விஜய் அது வேண்டாம் என்று தவிர்த்துவிட்டாராம். அப்படி இருந்தும், ஜனநாயகன் படத்தில் விஜய் இதுவரை 69 படத்தில் ஆடிய நடன கிளிப்ஸ்களை தொகுத்து, பட முடியும்போது தொகுப்பாக வைத்துள்ளார்களாம்.

இதுவரை எனக்கு சப்போர்ட் செய்தவர்களுக்கு நன்றி, நான் உங்களிடம் இருந்து பிரியாவிட செய்கிறேன், என்று விஜய் பேசுவது போல் ஒரு காட்சி உள்ளதாம். இதையெல்லாம் பார்த்தால் ரசிகர்கள் எமோஷ்னலாகிவிடுவார்கள் என்பதால் இதுகுறித்தும் ரகசியமாகவே வைத்துள்ளனர்.

நம்பர் 1 ஸ்டாராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் விஜய் இருக்கிறர். அவர் படம் ரிலீஸ் என்றாலே அதிரிபுதிரி கூட்டம் வந்துவிடும். அதிலும் பொங்கல் நேரத்தில் கேட்கவே தேவையில்லை.

பெரிய கலெக்ஷனை இந்த ஜனநாயகன் படம் ஈட்டித்தரும் என்றும் நிச்சயம் ரூ. 1000 கோடியை தாண்டக்கூடிய படமாகவும் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வெற்றி, வரும் தேர்தலுக்கு விஜய்க்கு உதவும் என்று நம்புகிறேன் என பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *