இந்திய சினிமாவில் BAN செய்யப்பட்ட டாப் நடிகர்கள்

இந்திய சினிமாவில் BAN செய்யப்பட்ட டாப் நடிகர்கள்
  • PublishedJune 11, 2025

சின்மயி: பின்னணி பாடகி சின்மயியை தமிழ் சினிமாவில் வேலை செய்ய விடாமல் தடை பண்ணியது தற்போது பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது. நல்ல திறமை இருந்தும் சின்மயி போல் தமிழ் சினிமாவிலிருந்து தடை செய்யப்பட்ட 5 பேரை பற்றி பார்க்கலாம்.

அசின்: த்ரிஷா, நயன்தாரா எல்லாம் இப்போது மார்க்கெட்டுடன் அசின் சினிமாவில் இருந்து ஒதுங்கி கொண்டதால் தான்.

ஈழப்போர் நடந்த சமயத்தில் இலங்கைக்கு யாரும் தொழில் நிமித்தமாக போக கூடாது என்று நடிகர் சங்கம் தடை விதித்திருந்தது.

பாலிவுட் பட சூட்டிங் ஒன்றிற்காக அசின் யோசிக்காமல் இலங்கை சென்று விட்டார். பின்னர் அசினுக்கு தமிழ் பட வாய்ப்புகள் கொடுக்க யாருமே முன் வரவில்லை.

திவ்யா ஸ்பந்தனா: குத்து, தம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் திவ்யா. இவர் காவேரி நீர் பிரச்சனைக்கு எதிரான போராட்டத்தில் கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் திவ்யாவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

நயன்தாரா: நடிகை நயன்தாராவின் கதை எல்லாம் தப்பித்தோம், பிழைத்தோம் என்பதை போல தான். பிரபு தேவா உடனான காதலால் நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

தெலுங்கு சினிமாவை தேடி சென்றவருக்கு அங்கேயும் வாய்ப்புகள் இல்லாமல் போனது. 3 வருட காத்திருப்புக்கு பிறகு ராஜா ராணி படம் மூலம் விட்டதை பிடித்தார்.

குஷ்பூ: வளர்ந்து வரும் கதாநாயகியாக இருந்த காலத்தில் வாரிசு நடிகருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. வாரிசு நடிகரின் அப்பாவான அந்த உச்ச நட்சத்திரத்தின் தலையீட்டால் குஷ்பூ பல வருடங்களுக்கு தமிழ் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார்.

வடிவேலு: விஜயகாந்தை பற்றி அவதூறாக பேசியதால் தான் வடிவேலு தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார் என்று நமக்கு தெரியும். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்று கூடி ஒரு மனதாக வடிவேலுவுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்க கூடாது என முடிவு எடுத்திருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *