நயன்தாராவை தயாரிப்பாளர்கள் ஒதுக்கி வைப்பது ஏன் தெரியுமா?

நயன்தாராவை தயாரிப்பாளர்கள் ஒதுக்கி வைப்பது ஏன் தெரியுமா?
  • PublishedJune 10, 2025

ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தது. ஆனால் இப்போது தொடர் தோல்வியால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் தயாரிப்பாளர்கள் நயன்தாராவை தவிர்ப்பதற்கான காரணம் என்ன என்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இயக்குனர்களுடன் நான் இப்படி தான் நடிப்பேன் என்று நயன்தாரா வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக ஒரு செய்தி பரவி வந்தது.

இந்த சூழலில் வலைப்பேச்சு அந்தணன் நயன்தாராவை பற்றி கூறியிருக்கிறார். அதாவது நயன்தாராவுடன் படப்பிடிப்புக்கு நிறைய பவுன்சர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக சில பேர் வருகின்றனர்.

இவர்களுக்கெல்லாம் செலவே கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கு மேலாகிறது. இதையும் தயாரிப்பு நிறுவனம் தான் செலவு செய்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அவ்வளவு செலவு செய்தும் நயன்தாராவை வைத்து எடுக்கும் படங்கள் இப்போது ஓடவில்லை. அதனால்தான் இப்போது நயன்தாராவுக்கு பதிலாக மற்ற நடிகைகளை தேர்வு செய்கிறார்கள்.

மேலும் ஜீவா நடிப்பில் வெளியான ஈ படத்தில் கூட நயன்தாரா நடித்த போது ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அப்போது எந்நேரமும் அவருடன் போனில் பேசிக் கொண்டிருந்ததால் படப்பிடிப்பு தாமதமானது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி நேரடியாகவே நயன்தாராவை அழைத்து திட்டிவிட்டார்.

அதன் பிறகு படத்தை சரியாக நடித்துக் கொடுத்துவிட்டு நயன்தாரா சென்றார். ஆனால் அதன் பிறகு தயாரிப்பாளர்கள் நயன்தாரா கேட்டதை செய்ததால் அவர் எல்லை மீறி நடந்து கொண்டார். இப்போது பவுன்சர்களுக்கும் சேர்த்து சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்களே அவரை ஒதுக்கி வைத்திருக்கிறனர் என்று அந்தணன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *