அஜித் ரசிகர்களுக்கு டபுள் விருந்து குறித்து தகவல்

முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் நாளை குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.
இந்த ஆண்டு ஏற்கனவே விடாமுயற்சி படம் வெளிவந்த நிலையில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படமும் அஜித் நடிப்பில் வெளிவரவுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மற்றொரு சிறப்பான தரமான சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வருகிற மே 1ம் தேதி அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜிவ் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித், மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.