எல் 2 எம்புரான் படத்தின் பட்ஜெட்டினால் ரசிகர்கள் ஆச்சரியம்

எல் 2 எம்புரான் படத்தின் பட்ஜெட்டினால் ரசிகர்கள் ஆச்சரியம்
  • PublishedMarch 23, 2025

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘எல் 2 எம்புரான்’ படத்தின் டிரைலரைப் பார்த்தவர்கள் படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடி இருக்கும் என எதிர்பார்த்திருப்பார்கள்.

ஆனால், படத்தின் பட்ஜெட் பற்றி இயக்குனர் பிரித்விராஜ் சொன்ன தகவல் பிரம்மாண்ட இயக்குனர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கும்.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த பிரித்விராஜ், “எங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், அதை படத்தின் தயாரிப்பிற்காக செலவிட்டோம்.

சம்பளமாக மட்டுமே 80 கோடி ரூபாய் செலவழித்த படமல்ல இது. ஆனால், தயாரிப்பிற்காக 20 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்ட படம்,” எனக் கூறியுள்ளார்.

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், இயக்குனர்கள் மோகன்லால், பிரித்விராஜ் ஆகியோரது அர்ப்பணிப்பைப் பார்த்தாவது தங்களை மாற்றிக் கொள்வார்களா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழும்.

அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி வெளியாக உள்ள ‘எல் 2 எம்புரான்’ படத்தின் முன்பதிவு எதிர்பார்த்ததை விடவும் அமோகமாக நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *