விவாகரத்து வழக்கு – ஒரே காரில் கோர்ட்டுக்கு வந்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவி

விவாகரத்து வழக்கு – ஒரே காரில் கோர்ட்டுக்கு வந்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவி
  • PublishedMarch 24, 2025

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். பின்னணிப் பாடகி சைந்தவியை படிக்கும் காலத்திலிருந்து காதலித்து 2013ல் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். 10 ஆண்டுகளாக இவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்ற நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையினால் கடந்தாண்டு மே மாதம் பிரிவதாக அறிவித்தனர்.

அதேசமயம் இருவரும் நட்பை தொடருகின்றனர். ஜிவி பிரகாஷின் இசையில் சைந்தவியும் பங்கேற்று பாடினார்.

இந்நிலையில் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் இன்று(மார்ச் 24) இருவரும் நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்தனர்.

ஒரே காரில் வந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர் சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். அதில் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

அதை அடுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த இருவரும் ஒரே காரில் சென்றது தான் ஹைலைட். இதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *