அஜித்தை செம மாஸாக திரையில் காட்டிய ஜி.வி. பிரகாஷ் சம்பளம் குறித்து தகவல்

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி. பிரகாஷ்.இவர் முதல் முறையாக அஜித் திரைப்படத்திற்கு இசையமைத்தது என்றால் அது கிரீடம் படம் தான்.
இப்படத்திற்கு பின் அஜித் – ஜி.வி இருவரும் இணையவில்லை. ஆனால், ரசிகர்கள் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ண வேண்டும் என ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.
அதன்படியே, தரமான சம்பவமாக குட் பேட் அக்லி அமைந்தது. படம் துவங்கிய முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை தனது பின்னணி இசையாலும், பாடல்களாலும் படத்தை செதுக்கி இருந்தார் ஜி.வி. பிரகாஷ். குறிப்பாக பின்னணி இசை வெறித்தனமாக இருந்தது.
இந்த நிலையில், மாபெரும் வெற்றியடைந்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக இசையமைக்க ஜி.வி. பிரகாஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை ஜி.வி. பிரகாஷ் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறுகின்றனர்.